T20 உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் 5 இந்திய வீரர்கள்
T20 உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் 5 இந்திய வீரர்கள் யாரென இந்த பதிவில் பார்க்கலாம்.
2026 T20 உலகக்கோப்பை
2026 ஐசிசி T20 உலகக்கோப்பை, பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

20 அணிகள் பங்குபெறும் இந்த தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
2024 T20 உலகக்கோப்பையில் வென்று இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது. அதிகபட்சமாக இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகள் 2 முறை கோப்பை வென்றுள்ளது.

2026 T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராக உள்ளார்.
அதிக ஓட்டங்கள் குவித்த 5 இந்திய வீரர்கள்
T20 உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் குவித்த 5 இந்திய வீரர்கள் குறித்து காணலாம்.
விராட் கோலி

விராட் கோலி, 35 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 15 அரைசதங்கள் உட்பட 1292 ஓட்டங்கள் குவித்து, 58.72 துடுப்பாட்ட சராசரியுடன் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா, 47 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, 12 அரைசதங்கள் உட்பட1220 ஓட்டங்கள் குவித்து, 34.85 துடுப்பாட்ட சராசரியுடன் சராசரியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங்

யுவராஜ் சிங், 31 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, 4 அரைசதங்கள் உட்பட 593 ஓட்டங்கள் குவித்து, 23.72 துடுப்பாட்ட சராசரியுடன் சராசரியுடன் 3வது இடத்தில் உள்ளார்.
எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி, 33 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, 529 ஓட்டங்கள் குவித்து, 35.26 துடுப்பாட்ட சராசரியுடன் சராசரியுடன் 4வது இடத்தில் உள்ளார். மேலும், 14 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர், 21 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, 524 ஓட்டங்கள் குவித்து, 26.20 துடுப்பாட்ட சராசரியுடன் சராசரியுடன் 5வது இடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |