10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள புதிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ஸ்மார்ட்போன் சந்தையில் 10,000 ரூபாய்க்கு கீழ் புதிதாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ள டாப் 5 போன்கள் குறித்த விவரம் இந்த செய்தி தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.
10,000 கீழான மொபைல் போன்கள்
உலக அளவில் மக்கள் தொகையில் முன்னணி நாடாக தற்போது இந்தியா உள்ளது, மக்கள் தொகையில் எவ்வளவு எண்ணிக்கை உள்ளதோ அதைப் பொறுத்தே அந்த நாட்டின் வணிக சந்தையும் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவின் வணிக சந்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய அளவு கொண்டதாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட இந்திய நாட்டில் பல கோடி மக்கள் கையில் தற்போது ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது, பெருநகரங்கள் முதல் சிறுநகரங்கள் உள்ள கடைகள் வரை தயிர் வாங்க வேண்டும் என்றாலும் Gpay, Phonepe போன்றவற்றையே மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான பணம் இல்லாத பரிவர்த்தனைகளையே இந்திய அரசும் பெரும்பாலும் பரிந்துரைத்து வருகிறது, ஆனால் இத்தகைய நவீன வசதிகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 10,000 ரூபாய்க்கு கீழ் புதிதாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நோக்கியா C32
சமீபத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா C32(Nokia C32) 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலான நோக்கியா C32, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.
Nokia
3 நாட்கள் வரையிலான பேட்டரி திறன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு UI அமைப்புடன், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான IP52 மதிப்பை பெற்றுள்ளது.
ரெட்மி ஏ2
ரெட்மி ஏ2(Redmi A2) சந்தையில் 6,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Redmi
6.52 இன்ச் HD+ திரையை கொண்டுள்ளது, மேலும் 5000mAh பேட்டரி திறன் இணைக்கப்பட்டுள்ளது.
Helio G36 octa-core processor பொறுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M04
சாம்சங் கேலக்ஸி M04(Samsung Galaxy M04) சந்தையில் 8,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6.5 இன்ச் HD+ திரையை கொண்டுள்ளது, மேலும் அதிவேக சார்ஜிங் USB Type-C port உடன் 5000mAh பேட்டரி திறன் இணைக்கப்பட்டுள்ளது.
Samsung
1080p துல்லியத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் இரண்டு கேமரா வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா E13
மோட்டோரோலா E13(Motorola E13) மாடல் சந்தையில் 6,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் அம்சங்களே இதிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் 10W அதிவேக சார்ஜிங் USB Type-C port உடன் 5000mAh பேட்டரி திறன் இணைக்கப்பட்டுள்ளது.
Motorola
லாவா பிளேஸ் 2
லாவா பிளேஸ் 2(Lava Blaze 2) மாடல் சந்தையில் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவை தனித்துவமான Unisoc T616 processor அமைப்பை கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.
LAVA
6.5 இன்ச் HD+ திரையை கொண்டுள்ளது.
மேலும் 18W அதிவேக சார்ஜிங் USB Type-C port உடன் 5000mAh பேட்டரி திறன் இணைக்கப்பட்டுள்ளது.