TOP 10 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அதானியை பின்னுக்கு தள்ளிய அம்பானி
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.
சரிந்த அதானி
போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடத்தில் 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உள்ளார். இரண்டாவது இடத்தில் 68 பில்லியன் டாலர் (ரூ.5.64 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இருக்கிறார்.
இதில், ஹிண்டன்பர்க் அறிக்கையால் தான் அதானி சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இதனால், அதானி குழுமத்திற்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பானது.
Top 10 இந்திய கோடீஸ்வரர்கள்
- முகேஷ் அம்பானி (ரூ.7.63 லட்சம் கோடி)
- கவுதம் அதானி (ரூ.7.63 லட்சம் கோடி)
- ஷிவ் நாடார் (ரூ.2.40 லட்சம் கோடி)
- சாவித்திரி ஜிண்டால் (ரூ.2 லட்சம் கோடி)
- ராதாகிஷான் தமனி (ரூ.1.90 லட்சம் கோடி)
- சைரஸ் பூனாவாலா (ரூ.1.75லட்சம் கோடி)
- இந்துஜா குடும்பம் (ரூ.1.66 லட்சம் கோடி)
- திலிப் சங்வி (ரூ.1.57 லட்சம் கோடி)
- குமார் பிர்லா (ரூ.1.45 லட்சம் கோடி)
- ஷபூர் மிஸ்திரி (ரூ.1.41 லட்சம் கோடி)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |