தூத்துக்குடியில் உருவான பயமுறுத்தும் சூறாவளி: ரூ.6 கோடி வரை சேதாரம்: வைரல் வீடியோ
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட காற்று சுழல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உருவான சூறாவளி
ஞாயிற்றுக்கிழமை தூத்துகுடி மாவட்டம் வாகைக்குளம் மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் ஏற்பட்ட எதிர்பாராத காற்று சுழல் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சிதைத்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காற்றுச் சுழல் பார்ப்பதற்கு சூறாவளி(Tornado) போல் பயங்கரமாக தோற்றமளித்தது மக்களுக்கு பயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. இது உள்ளூர் இடிமின்னல் மற்றும் காற்று மேல்நோக்கி நகர்தல் என்று வானிலை ஆய்வு மையத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
A dramatic tornado-like weather phenomenon swept through parts of Thoothukudi district on Sunday evening, leaving a trail of destruction across homes, roadside infrastructure, a toll plaza and a private theme park, even as meteorologists clarified that the event was not a tornado… pic.twitter.com/P3Kf2JsHKq
— NDTV (@ndtv) June 22, 2026
மேலும் இதனை சாதாரண சூறாவளியாக கருத முடியாது என்றும், இவை ஒரு உள்ளூர் வெப்பச்சலன சுழல் அல்லது தற்காலிக புனல் மேகம் மட்டுமே என்றும் வானிலை ஆய்வு மையத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான வீடுகளை தாக்கிய இந்த சூறாவளி, மரங்களை சாய்த்ததுடன், மின்கம்பங்கள் மற்றும் வீட்டின் மேற்கூரைகளையும் பிய்த்து எறிந்தது.
மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் காற்றில் தூக்கி எறிந்து விடாமல் இருக்க, ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு தரையில் படுத்திருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின் படி, கிட்டத்தட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சேதங்கள் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் ஏற்பட்டு இருப்பதாகவும், மொத்த இழப்பு ரூ 5 கோடி முதல் ரூ.6 கோடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |