அமெரிக்காவை தாக்கிய பயங்கர புயல்: பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பயங்கரமான புயலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று தூக்கி உருட்டிய நிலையில், அந்த கார் மீண்டும் சாலையில் சாதாரணமாக சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை நேற்று(திங்கள்கிழமை) தாக்கிய பயங்கரமான புயலில், வீசிய சூறாவளி காற்றில் மரங்கள், வீடுகள் மின் இணைப்புகள் என அனைத்தும் பலத்த சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிவிப்பில், இந்த புயல் கடுமையான இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையை ஏற்படுத்தும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் எச்சரித்து இருந்தது.
Was this truck spinning on its side, then flipped upright before it just drove away after getting caught up in a tornado? ?#txwx #Texas #Tornado
— Marco | Stand with Ukraine ?? (@nycmarcopolo) March 22, 2022
pic.twitter.com/m4nHQrkmmd
டெக்ஸான் நகரங்களான ஜாக்ஸ்போரோ, லுலிங் மற்றும் ரவுண்ட் ராக் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளை தாக்கியுள்ள இந்த புயல் கிட்டத்தட்ட 45,000 பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் அமைப்பானது மேலும் பல சூறாவளி காற்றை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் தேசிய வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
Photos sent to me from my aunt’s house in the Greenlawn Place neighborhood in Round Rock.#roundrock #texas #tornado #severewx pic.twitter.com/y8cvgemBU5
— Mark Peña (@MarkPenaWX) March 22, 2022
இதனிடையே, டெக்சாஸை மாகாணத்தை தாக்கிய புயல் சாலையில் சென்று கொண்டிருந்த காரை தூக்கி தலைகீழாக உருட்டிய நிலையில், அந்த கார் மீண்டும் சாலையில் சாதரணமாக சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.