சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள்: நடுங்க வைக்கும் உக்ரைன்
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்கள் போர் குற்ற விசாரணை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைனின் Borodyanka நகரில் நான்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் ரஷ்ய துருப்புகளின் கொடூரங்கல் அம்பலமாகியுள்ளன.
உலக நாடுகளை உலுக்கிய புச்சா நகர கொடூரங்களுடன் Borodyanka நகர சம்பவத்தையும் ஒப்பிட்டு அதிகாரிகள் உறைந்து போயுள்ளனர். சுமார் 25,000 மக்கள் குடியிருந்து வந்த Borodyanka நகரில் ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் தீவிரமாக பதிந்துள்ளது.
கீவ் நகரை கைப்பற்றும் முனைப்பில், ரஷ்ய துருப்புகள் புச்சா மற்றும் Borodyanka நகரில் கொடூரங்களை கட்டவிழ்த்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. பீரங்கி தாக்குதல்களை முன்னெடுக்கும் அதே வேளை அப்பாவி பொதுமக்களை ரஷ்ய துருப்புகள் வேட்டையாடியுள்ளனர்.
பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகள் ரஷ்ய குண்டுவீச்சில் தரைமட்டமானதுடன், அதில் பல நூறு மக்கள் சிக்கி மடிந்துள்ளனர்.
தப்பியவர்கள் தெருவில் ரஷ்ய துருப்புகளால் சுடப்பட்டு மாண்டுள்ளனர். இதுவரை பெண்கள், ஆண்கள் மற்றும் சிறார்கள் உட்பட 150 சடலங்களை மீட்டுள்ளதாகவும், சுமார் 50 பேர்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
ஆடை இல்லாமல் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள்
ஆனால், புச்சா நகரில் ரஷ்ய துருப்புகளால் வேட்டையாடப்பட்டவர்கள் எண்ணிக்கை 412 என கூறப்படுகிறது. புச்சா நகர கொடூரங்களை விடவும் Borodyanka நகரம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர், இதுவரை 10,000 போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 41 ரஷ்ய வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் முதல் போர் குற்ற விசாரணையை கீவ் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியான முதியவர் ஒருவரை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொலை செய்த 21 வயது ரஷ்ய வீரர் மீது நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022