பிரதமர் ரிஷி கட்சி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள் பதிலளிக்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றியைக் கண்டுள்ள எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் முன்வைத்துள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியினர் சிலரே சில வரி ஏய்ப்பு குற்றங்கள் செய்துள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவரைக் குறிவைக்கும் ஆளுங்கட்சி
பிரித்தானிய எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் ஏஞ்சலா ரேய்னர் (Angela Rayner). அவர் தனது சொத்துக்கள் குறித்து தவறான தகவல்கள் கொடுத்ததாகவும், வீடு ஒன்றை விற்றபோது வரி செலுத்தவில்லை எனவும் ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி, பொலிஸ் விசாரணை வரை கொண்டுவந்துவிட்டார்கள்.
Image: PA
பிரதமர் ரிஷி கட்சி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்
ஆனால், ஆளும் பிரதமர் ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், வீடு விற்ற வகையில், 5.4 மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image: PA
David Tredinnick, Eleanor Laing, Shailesh Vara மற்றும் Maria Miller என்னும் நான்கு கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை விற்றுள்ளார்கள். ஆனால், அவர்கள் அதற்கு வரி செலுத்தினார்களா என்பது தெரியாது. அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.
Image: Nicola tree
பிரித்தானிய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் 98,000 ஓய்வு பெற்றோர் உணவுக்காக உணவு வங்கிகளை நாடியுள்ளார்கள்.
Image: PA
பிரித்தானியாவில், 4.2 மில்லியன் குழந்தைகள் உட்பட 14.4 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கிறார்களாம். தான் பிரதமரானபின் மக்களுடைய வாழ்க்கைத் தரம் சீராக இருப்பதாக ர்ஷி கூறியுள்ளார். ஆனால், மக்கள் பலர் இன்னமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஆளுங்கட்சியினர் தங்கள் தவறுகள் பலவற்றை மறைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சட்டுகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.
Image: Getty Images
Image: PA
Image: Hinckley Times
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |