Total Solar Eclipse 2024: எந்தெந்த நாடுகளில் காணமுடியும்?
2024ஆம் ஆண்டின் முதல் முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்வு, இன்று, அதாவது, ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் நிலையில், இந்தியாவில் அதைக் காணமுடியுமா என்னும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
Total Solar Eclipse 2024
சூரிய கிரகணம் என்பதே ஒரு அபூர்வமான நிகழ்வுதான் என்னும் நிலையில், முழுமையான சூரிய கிரகணம் அல்லது Total Solar Eclipse என்னும் நிகழ்வு உண்மையாகவே ஒரு அபூர்வ நிகழ்வு என்பதை மறுக்கமுடியாது.
அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரன் சூரியனை ஓரளவு மறைப்பதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த முழுமையான சூரிய கிரகணம் என்பது என்னவென்றால், சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்துவிடுவதால், பூமி, அதிகாலை அல்லது சாயங்காலம் நேரம் போல இருட்டாகிவிடும்.
இந்த அபூர்வ நிகழ்வைக் காண்பதற்காக கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மக்கள் ஆர்வத்துடன் கூடியுள்ளார்கள்.
எந்தெந்த நாடுகளில் வாழ்வோர் காணமுடியும்?
இந்த முழுமையான சூரிய கிரகணத்தை வட அமெரிக்கா, மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் வாழ்வோர் காணமுடியும்.
இன்று நிகழும் சூரிய கிரகணம் இரண்டரை மணி நேரம் நீடிக்கும் என்றாலும், முழுமையான சூரிய கிரகணம், அதாவது, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் அபூர்வ நிகழ்வு, 4 நிமிடங்கள், 27 விநாடிகள் வரை நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |