அணுகுண்டு தாக்குதல் போன்று... மொத்தமாக உருக்குலைந்த நகரம்: இடிபாடுகளில் சிக்கிய பலர்
ஐரோப்பிய நாடான குரோசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து முக்கிய நகரமான Petrinja மொத்தமாக உருக்குலைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Petrinja நகரம் மொத்தமாக உருக்குலைந்துள்ள நிலையில், நகரின் மேயர் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது போன்று உருக்குலைந்து போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறார் பாடசாலை ஒன்றும் சில மருத்துவமனைகளும் இப்பகுதியில் தரைமட்டமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குரோசியாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியால் ஏற்பட்ட நிலநடுக்கும் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டுள்ளது. செர்பியாவில் அணு உலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே பகுதியில் நேற்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



