சுற்றுலா சென்ற இடத்தில் யானையை குளிக்க வைத்த பெண்: திடீரென நிகழ்ந்த பயங்கரம்
தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இளம்பெண்ணொருவர் யானை ஒன்றைக் குளிக்கவைத்துக்கொண்டிருக்கும்போது, அந்த யானை அவரைக் குத்திக்கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
யானையை குளிக்க வைத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஸ்பெயின் நாட்டவரான Blanca Ojanguren Garcia (22) என்னும் இளம்பெண் தனது காதலருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
தாய்லாந்தில், சுற்றுலாப்பயணிகள் யானைகளை குளிக்கவைப்பது பிரபலமான ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும்.
அப்படி, Koh Yao யானைகள் காப்பகத்தில், ஒரு யானையை Blancaவும் அவரது காதலரும் குளிக்கவைத்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது அந்த யானை திடீரென Blancaவை தனது தந்தத்தால் குத்தியுள்ளது. படுகாயமடைந்த Blanca சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
சுற்றுலாப்பயணிகளுடன் தொடர்ந்து இடைபடவேண்டியிருந்ததால் அந்த யானை எரிச்சலடைந்திருந்திருக்கலாம் என்றும், அதனாலேயே அது Blancaவைத் தாக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |