பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த சுற்றுலா பயணி: உள்ளூர் காவல்துறை எடுத்த நடவடிக்கை
பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்
நார்வே நாட்டின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடி ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பல் ஒன்றில் வந்த சுற்றுலா பயணி ஒருவர் பனிக்கரடி தூங்கிக் கொண்டு இருப்பதை கண்டுள்ளார்.
மேலும் கரடி நகர்ந்து செல்வதை பார்க்க விரும்பிய அந்த நபர் வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை தொடர்ந்து எழுப்பி கரடியை பீதியடைய வைத்துள்ளார்.

திடீரென எழுப்பப்பட்ட அந்த சத்தத்தில் திகிலடைந்த கரடி தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டதோடு அந்த இடத்தை விட்டும் தப்பியோடியது.
ஸ்வால்பார்டில் 1972ம் ஆண்டு முதல் பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகிறது. மேலும் பனிக்கரடிகளுக்கு இடையூறு செய்வது என்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.
ரூ.5 லட்சம் வரை அபராதம்
இந்த நிகழ்வுகளை கவனித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்வால்பார்ட் ஆளுநர் முன்பு நிறுத்தியுள்ளனர்.
விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இறுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு 50000 நார்வேஜியன் குரோனர்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |