சிங்கத்தைத் தொட முயன்ற சுற்றுலாப்பயணி... சிங்கம் கொடுத்த அதிர்ச்சி
தான்சானியா நாட்டில் உயிரியல் பூங்கா ஒன்றில் அசட்டுத்தனமாக சிங்கம் ஒன்றை சுற்றுலாப்பயணி ஒருவர் தொடமுயலும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாக வலம் வருகிறது.
தான்சானியாவிலுள்ள Serengeti தேசிய பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் ஜீப் ஒன்று, சிங்கம் ஒன்றின் அருகே சென்று நிற்பதை அந்த வீடியோவில் காணலாம்.
அப்போது, அந்த ஜீப்பிலிருக்கும் ஒருவர் ஜன்னல் கண்ணாடியைத் திறக்க, ஒரு பெண் கையை வெளியே நீட்டி சிங்கத்தின் முதுகைத் தடவிவிட, ஒரு ஆண் இந்த காட்சியை புகைப்படம் எடுக்க முயல்கிறார்.
சிங்கம் திரும்பி முறைக்க, பயந்துபோன மற்றொரு சுற்றுலாப்பயணி, ஜன்னலை மூடுங்கள் என சத்தமிட, முதல் பயணி ஜன்னலை மூடுவதற்குள் சிங்கள் தலையை சிலுப்பி பயங்கரமாக கர்ஜிக்க, புகைப்படம் எடுக்க முயன்றவர் பயத்தில் கமெராவையே கீழே போட்டு விடுகிறார்.
வீடியோவைப் பார்த்தவர்கள், இந்த ஆளுக்கு புத்தி இல்லையா, உலகிலேயே இவ்வளவு முட்டாளான ஒரு சுற்றுலாப்பயணி ஒருவர் உண்டென்றால், அவர் இவராகத்தான் இருப்பார் என்று வெளுத்து வாங்குகிறார்கள்.