அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்க பெருந்தொகை செலுத்திய சுற்றுலாப் பயணிகள்
அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்கும் பொருட்டு பெருந்தொகையைக் கட்டணமாக செலுத்திய இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மிலன் நகரில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.
10,000 க்கும் மேற்பட்டோர்
போஸ்னியாவின் தலைநகர் Sarajevo பகுதியிலேயே கோடீஸ்வரர்களான இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அப்பாவி மக்களைக் கொன்று புதுவகையான சுற்றுலாவை முன்னெடுத்துள்ளனர்.

1990களில் செர்பியா மற்றும் போஸ்னியா போராளிகளால் 4 ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டிருந்த Sarajevo பகுதியிலேயே இச்சம்பசம் நடந்துள்ளது.
1992 மற்றும் 1996 க்கு இடையில் Sarajevo பகுதியில், நவீன போர் வரலாற்றில் ஒரு தலைநகரின் மீதான மிக நீண்ட முற்றுகையின் போது 10,000 க்கும் மேற்பட்டோர் ஷெல் தாக்குதல்கள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடுகளால் கொல்லப்பட்டனர்.
தற்போது சிக்கியுள்ள அந்த சுற்றுலாப் பயணிகள் தீவிர வலதுசாரி வட்டத்தை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. முற்றுகையிடப்பட்ட Sarajevo நகரத்திற்கு வார இறுதி நாட்களில் பயணம் மேற்கொண்ட அவர்கள் போஸ்னிய செர்பிய இராணுவ உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதை ரசித்துள்ளனர்.
அவர்கள் செர்பிய விமான நிறுவனமான அவியோஜெனெக்ஸில் ட்ரைஸ்டேவிலிருந்து பெல்கிரேடிற்கு பயணப்பட்டு, அந்தக் கொடூர சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கென 70,000 முதல் 88,000 பவுண்டுகள் வரையில் அவர்கள் செலவிட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. சிறார்கள் என்றால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மிலனைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எசியோ கவாஸ்ஸெனி என்பவர் சமர்ப்பித்த 17 பக்க சட்டப் புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது.
100 சுற்றுலாப் பயணிகள்
2022ல் வெளியான ஒரு ஆவணப்படத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. சுற்றுலாப் பயணிகள் ராடோவன் கராட்சிக்கின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
இந்த ராடோவன் கராட்சிக் என்பவருக்கு 2016 ஆம் ஆண்டில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் குறைந்தது 100 சுற்றுலாப் பயணிகள் இந்த துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.
மிலன் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் Turin, Trieste பகுதிகளில் குடியிருக்கும் செல்வந்தர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |