இனப்பெருக்க காலத்தில் ஆண் யானையிடம் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்: ஒரு திகில் வீடியோ
தென்னாப்பிரிக்காவில், ஆண் யானை ஒன்றிடம் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடிப்பதைக் காட்டும் திகில் வீடியோ ஒன்று வெளியாகி, காண்போரை பதறவைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள Selati Game Reserve என்னும் உயிரியல் பூங்காவில் திறந்த கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் சில சுற்றுலாப்பயணிகள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த யானைக் கூட்டத்திலிருந்து வந்த ஆண் யானை ஒன்று, அந்த காரை பயங்கரமாக தாக்க, காரில் பயணித்தவர்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்கள்.
விடயம் என்னெவென்றால், அது யானைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைகளின் உடலில் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஹார்மோனின் அளவு 60 மடங்கு வரை அதிகரித்துவிடுவதால் அந்த யானை முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுமாம்.
அப்படி அந்த யானை ஆக்ரோஷமாக இருந்த நிலையில், இந்த சுற்றுலாப்பயணிகள், உண்மையில் அவர்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக பயிற்சி எடுப்பவர்கள், தங்கள் காரில் ஒலி எழுப்பியபடி செல்ல, அந்த ஆண் யானை தனது பெண் யானைகளிடம் அவர்கள் நெருங்குவதாக எண்ணிக்கொண்டு கோபத்தில் அவர்களைத் தாக்கியுள்ளதாம்.
அந்த சுற்றுலாப்பயணிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்த நிலையில், பிறகு அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்த பிறகுதான் தாங்கள் விட்டு வந்த காரை எடுக்கச் சென்றார்களாம்.
அப்போது அந்த யானை தன் தாக்கியதில் அந்த கார் படுபயங்கரமாக சேதமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.
யானையிடம் தப்பிய அவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022