வருங்கால தலைமுறை குரல் எழுப்பும்போது ஒடுக்குவதா? எதிர்காலத்தை அழித்துவிடும்: பிரபல நடிகர்
கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பதிவிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்ட களத்தில் குவிந்த இராணுவப்படை, அதிவிரைவு படையினர் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றவர்கள் மீது தடியடி நடத்தினர் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டொவினோ தாமஸ்
அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "சரி, தவறு என்பது ஒருவேளை சார்புடையதாக இருக்கலாம்; ஆனால், அமைதியான போராட்டத்தைக் கையாள்வதற்கு இது நிச்சயமாக சரியான வழி அல்ல. நாட்டின் வருங்கால தலைமுறையினர் தங்கள் குரலை எழுப்பும்போது, அவர்களை ஒடுக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கை அந்த எதிர்காலத்தையே அழித்து விடுகிறது" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |