ரஷ்யா எதிராக சாட்சியாக மாறும்...இரத்தில் நனைந்த பொம்மை: சிக்கியது ஆதாரம்!
உக்ரைனின் கிராமடோர்ஸ்க் பகுதியில் நடந்த தாக்குதலில் மனித இரத்தம் படிந்து சிதறி கிடந்த குழந்தை ஒன்றின் பொம்மை ரஷ்யாவின் போர் குற்றங்களுக்கு எதிரான ஆதாரமாக உக்ரைன் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் ஆறாவது வாரமாக தொடரும் நிலையில், அந்தநாட்டின் கிழக்கு பகுதி நகரான கிராமடோர்ஸ்க்கில் இருந்து வெளியேறுவதற்காக ரயில்வே நிலையத்தில் காத்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலை சிலநாள்களுக்கு முன்பு நடத்தியது.
இதில் குறைந்ததது 30 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நகரை விட்டு வெளியேறுவதற்காக காத்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், இது மிக்கபெரிய போர் குற்றம் என்றும் உக்ரைன் உட்பட பல உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதிகளில் ரஷ்யாவின் போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை உக்ரைன் தீவிரமாக சேகரித்து வருகிறது.
அந்தவகையில், கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது மனித இரத்தத்தால் நனைக்கப்பட்டு சிதறி கிடந்த குழந்தை ஒன்றின் பொம்மையை உக்ரைன் பொலிசார் போர் குற்றங்களுக்கான ஆதாரமாக சேகரித்து உள்ளது.
இதனை உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர் விதிமீறல்களுக்கு ஆதாரமாக ஐக்கிய நாடுகள் சபையில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.