இந்தியாவில் புதிய Toyota Camry Hybrid Sprint Edition அறிமுகம்
Toyota நிறுவனம் அதன் பிரபலமான Camry Hybrid மொடலின் புதிய Sprint Edition-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
புதிய Toyota Camry Hybrid Sprint Edition-ன் விலை ரூ.48.50 லட்சம் (ex-Showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Camry Hybrid Sprint Edition முக்கிய அம்சங்கள்
வெளிப்புற வடிவமைப்பில், dual-tone paint scheme, பல இடங்களில் matte black அலங்காரங்கள், புதிய matte black அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் கிட் மற்றும் ஸ்பாய்லர் மூலம் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில், பழைய Camry Hybrid-ல் உள்ள அம்சங்களுடன், Paddle Shifters, ventilated front seats, heads-up display, wireless charger, ambient lighting, 10 way power adjustable memory seats கொடுக்கப்பட்டுள்ளது.
Engine மற்றும் Performance
- 2.5 லிட்டர் Dynamic Force பெட்ரோல் என்ஜின்
- உயர்திறன் Lithium-ion பேட்டரி
- 230 bhp பவர்
- லிட்டருக்கு 25.49 கி.மீ. மைலேஜ்
இந்த புதிய எடிஷன் கார், நவீன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக Toyota Kirloskar Motor-ன் விற்பனை துணைத் தலைவர் Varinder Wadhwa கூறியுள்ளார்.
இந்த மொடல் Hybrid தொழில்நுட்பத்தில் 5-ஆம் தலைமுறையை பயன்படுத்தி சுற்றுச்சோழலுக்கு உகந்த மற்றும் சக்திவாய்ந்த காராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Toyota Camry Sprint Edition, Camry Hybrid India launch, Toyota Camry 2025 model, Camry Hybrid price India, Camry Sprint Edition specs, Camry milage