புதிய Toyota Innova HyCross Exclusive Edition அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
ரூ.32.58 லட்சத்தில் புதிய Toyota Innova HyCross Exclusive Edition அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
Toyota Kirloskar Motor நிறுவனம் புதிய Innova HyCross Exclusive Edition-ஐ மே 2025 முதல் ஜூலை 2025 வரை கிடைக்கும் வகையில் ZX(O) வேரியண்டில் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.32.58 லட்சம் (ex-showroom) ஆகும். இது சாதாரண ZX(O) மாடலை விட ரூ.1.24 லட்சம் அதிகமாகும்.
இந்த எடிஷன் இரண்டு நிறங்களில் மட்டும் கிடைக்கும்: Super White மற்றும் Pearl White. இது குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும்.
Exterior மாற்றங்கள்:
Dual Tone Exterior, Front Under Run, Front Grill Garnish, Wheel Arc Moulding, Outside Rear View Mirror (OVRM) Garnish, Exclusive Badge, Rear Under Run, Rear Door Chrome Lid Garnish, Black Elements, Roof, Front Grill, Rear Garnish, Alloy Wheels, Hood Emblem
Interior மாற்றங்கள்:
Dual Tone Interior, Instrument Panel, Door Fabric, Seat Material, Center Console Lid, Air Purifier, Leg Room Lamp, Wireless Charger
Toyota வின் விற்பனை துணைத் தலைவர் வரிந்தர் வாத்வா, "Innova HyCross எப்போதும் ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கைக்குரிய MPV ஆக இருந்துள்ளது. புதிய Exclusive Edition, உயர்ந்த பயண அனுபவத்தையும், தனிச்சிறப்பையும் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என கூறியுள்ளார்.
குடும்ப பயன்பாட்டிற்கு பொருத்தமான, வசதியுடன் கூடிய, பிரீமியம் MPV ஒன்றை விரும்புகிற பயணிகளுக்காக இந்த புதிய எடிஷன் சிறந்த தேர்வாக இருக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Toyota Innova Hycross Exclusive Edition, Toyota Innova Hycross 2025, Innova Exclusive Edition features, Innova ZX(O) new variant, HyCross white edition price, Toyota Innova dual tone interior, MPV with wireless charger India, Toyota limited edition launch May 2025