Jaguar கூட்டணியில் எதிர்பாராத அம்சங்களுடன் டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்., Tata Avinya சீரீஸ்
ஜாகுவார் கூட்டணியில் டாடா மோட்டார்ஸ் Tata Avinya எனும் புதிய எலக்ட்ரிக் கார் தொடரை அறிமுகம் செய்கிறது.
தற்போது ஆட்டோ மொபைல் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அரசாங்கங்கள் ஊக்குவிப்பதாலும், மக்கள் மின் வாகனங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாலும், இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் பாரிய ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருகின்றன. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் இந்தியாவின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா புதிய எலக்ட்ரிக் காரை சந்தைக்கு கொண்டு வருகிறது.
ஜாகுவார்-டாடா கூட்டணி
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் Tata Passenger Electric Mobility (TPEM) நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எலக்ட்ரிஃபைட் மாடுலர் ஆர்கிடெக்சர் (EMA) தளத்தின் அடிப்படையில் ஒரு புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
டாடா அவினியா (Tata Avinya) என்ற பெயரில் இந்த காரை உருவாக்கி வருவதாக டாடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டாடா துணை நிறுவனங்களான ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை இந்த காரைத் தயாரிக்கின்றன. இந்த பிரீமியம் காரை தயாரிப்பதற்காக, எலக்ட்ரிக்கல் ஆர்கிடெக்சர், எலக்ட்ரிக் டிரைவ் யூனிட், பேட்டரி பேக் மற்றும் உற்பத்தித் திறன் உள்ளிட்டவற்றுக்கான ராயல்டிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அவினியா கான்செப்ட்டை 2022ல் அறிமுகம் செய்தது. 2025ம் ஆண்டுக்குள் இந்த காரை சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த காரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்படும்.
சிறப்பு வடிவமைப்பு
இந்த காரின் வடிவமைப்பை பொறுத்த வரையில், அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை, வெளிப்புற காட்சியை நேரடியாக கார் டிஸ்ப்ளேவில் பார்க்கலாம்.
காரின் பின்புறத்தில் 'டி' வடிவமைப்பில் டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 முதல் 700 கிமீ வரை பயணிக்கிறது. SUV போன்று இந்த கார் முழு குரல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறது. காரின் ஸ்டீயரிங் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் விரைவில் விலை மற்றும் முழு அளவிலான அம்சங்களைப் பற்றிய விவரங்களை அறிவிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tata Avinya Series EV Cars, Tata Motors, Tata Premium Electric Cars, Tata Avinya Series, Tata Passenger Electric Mobility, Jaguar Land Rover, Tata Motors Limited