உடல் தேவைகளுக்கு பெண் ஊழியரை அடிமை ஒப்பந்தம் செய்த CEO., வெளிச்சத்திற்கு வந்த மோசமான நடத்தை
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனர் தனது முன்னாள் செயலாளரை பாலியல் அடிமையாக்கி சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
San Franciscoவில் அமைந்துள்ள Tradeshift எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ்டியன் லாங் (Christian Lanng), பெண் ஊழியர் ஒருவரை பாலியல் அடிமையாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம்
வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே 'அடிமை ஒப்பந்தத்தில்' (slavery contract) கட்டாயபடுத்தி கையெழுத்திட வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jane Doe என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அப்பெண், லாங் தன்னை பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், தன்னை மிகவும் கொடூரமாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் அந்த நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அவரை உடல்ரீதியாக சித்திரவதை செய்தல், சிறுநீர் கழித்தல் மற்றும் அவளது அந்தரங்க உறுப்புகளில் பல்வேறு பொருட்களைச் செருகுதல் உள்ளிட்ட மிகக் கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பணிநீக்கம் செய்த நிர்வாகம்
மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தவறான நடத்தை காரணமாக கிறிஸ்டியன் லாங் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவர் மீது கடுமையான புகார்கள் எழுந்ததை அடுத்து, நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது.
இந்த அடிமை ஒப்பந்தம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் HR-க்கு புகார் அளித்தபோது, 2020-ல் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அடிமை ஒப்பந்தத்தில்..,
இந்த வழக்குடன் தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி.. 'தன் எஜமானருக்கு தேவைப்படும்போது எப்போதும் அவருக்குக் கிடைக்க வேண்டும்.., அவள் மண்டியிட்டு அவனுக்காக என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும்.. அடிமையானவள் எஜமானின் தண்டனையைப் பெற வேண்டும். அவர் மீது கோபம், விரக்தி அல்லது விரக்தியைக் காட்டக்கூடாது.
சரியான உடையுடன் எடை 130-155 பவுண்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.. வாராந்திர முன்னேற்ற அறிக்கையை லாங்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும். எல்லா வகையிலும் மாஸ்டருக்கு முழுமையாக அடிபணிவேன் என்று ஒப்புக்கொள்கிறேன்." என்று உள்ளது. மேலும், அதில் உள்ள வழிகாட்டுதல்களின்படி அப்பெண்ணின் உடல் மீது கிறிஸ்டியன் லாங்கிற்கு முழு அதிகாரம் உள்ளது. அவருக்கே சொந்தமானது என்று நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A San Francisco tech company’s former CEO, Christian Lanng, was slapped with a lawsuit accusing him of sadomasochistic-style torture. His accuser says she was coerced into signing a sex “slave contract.”
— Amy Larson (@AmyLarson25) December 13, 2023
My full story: https://t.co/reNYyyBH5v pic.twitter.com/kstHcdWNWB
பணியை நேசிப்பதால் Tradeshift வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
சம்மதத்துடனே உறவு கொண்டேன்..
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கிறிஸ்டியன் லாங் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெண்ணின் சம்மதத்துடனே உறவு கொண்டதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து பதிலளிக்க மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
San Francisco, Tradeshift CEO Christian Lanng, கிறிஸ்டியன் லாங், slavery contract, Tech Company CEO