ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து நீளமான கூந்தலுக்கு பாரம்பரிய முறை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
முடி ஒருவரை அழகாகவும் இனிமையாகவும் காட்டக்கூடியது. ஆனாலும் பலரும் முடிக்காக நேரமும் பணமும் செலவிட யோசிப்பதில்லை.
இன்னும் சிலர் பிறரின் ஆலோசனைகளை கேட்டு செலவு செய்து கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தி முடியை இழக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- மருதாணி- 1 கைப்பிடி
- வேப்பிலை- 1 கைப்பிடி
- சின்னவெங்காயம்- 1/4 kg
- நெல்லிக்காய்- 1/4 kg
- தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் கருவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, சின்ன வெங்காயம், நெல்லிக்காய் சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பின் அதனை நன்கு வடிகட்டி அதன் சாறை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு இரும்பு கடாயில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடரேற்றவும்.
பின் தேங்காய் எண்ணெயில் அரைத்து வடிகட்டி வைத்திருந்த சாறை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
15 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அனைத்து அதனை மூடி போட்டு ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டுவிட வேண்டும்.
பின் மறுநாள் காலையில் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து பயன்படுத்தி வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |