பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் அருங்காட்சியகம்; பிரம்மிக்க வைக்கும் வேறு உலகம்
இலங்கையில் தெஹிவளை நகர சபை வீதியின் பின்பகுதிக்கு அருகில், பாரம்பரிய பொம்மை கலை அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் பழமையான இந்த அருங்காட்சியகம் இலங்கையின் பொம்மலாட்ட பிரியர் சரத் அபேகுணவர்தனவின் சிந்தனையால் உருவாக்கப்பட்டது.
கலாசார அலுவல்கள் அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை சமூகத்தினரிடையே பாரம்பரியக் கலைகளின் கலாசாரத்தைப் பேணுவதற்கும் இக்கலையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இது உருவாக்கப்பட்டது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களின் சகாப்தத்தில் பொம்மலாட்டங்களின் எச்சங்கள் மற்றும் பொம்மலாட்டம் பற்றிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இக்கலை இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து வந்த பயணிகளால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சான்றுகள் காட்டுகின்றன.
இந்த கலை வடிவம் சுற்றியுள்ள பல நாடுகளுக்கு பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், இருப்பினும், இந்திய வம்சாவளியினராக இருந்தாலும், இலங்கை பொம்மலாட்டம் அதன் சொந்த அடையாளத்தை கைப்பற்றியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.