உருவகேலி கொடுமை செய்த வகுப்பு தோழர்கள்..10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு
அமெரிக்காவில் 10 வயது சிறுவன் கண்ணாடி, பற்களால் கேலி செய்யப்பட்டதால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இண்டியானாவின் கிரீன்ஃபீல்டு நகரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சேமி டீஷ் (Sammy Teusch). இவர் தனது வகுப்பு தோழர்களால் உருவகேலி கொடுமைகளுக்கு உள்ளானார்.
கடந்த ஆண்டு தொடக்கப் பாடசாலையில் இருந்தபோதே சேமி டீஷ் மீது கொடுமைப்படுத்துதல் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கிரீன்ஃபீல்டு இடைநிலைப் பாடசாலைக்கு சேமி சென்றார். ஆனாலும் தனது கண்ணாடி மற்றும் பற்களை வைத்து கேலி கிண்டலுக்கு ஆளானார் சேமி.
இதனையடுத்து சேமி டீஷ் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி உயிரிழந்த அன்று இரவு வரை கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பாடசாலை பேருந்தில் சிறுவன் சேமி தாக்கப்பட்டதால் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |