நான் உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன்... என்னை நீங்கள் பார்ப்பது இதுதான் கடைசி முறை: அழகிய இளம்பெண் எடுத்த சோக முடிவு
டிக் டாக் பிரபலமாக வலம் வந்த அழகிய இளம்பெண் ஒருவர், நான் உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன், என்னை நீங்கள் பார்ப்பது இதுதான் கடைசி முறை என்று தன்னை பின்தொடர்பவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த Dee என்று அழைக்கப்படும் Dazhariaa Quint Noyes (18), 1.5 மில்லியன் பேர் பின்தொடரும் ஒரு டிக் டாக் பிரபலம்.
அவர் வெளியிடும் நடன வீடியோக்களில் சில நேரங்களில் அவரது அப்பாவும் பாட்டியும் கூட இடம்பெறுவதுண்டு.
ஆனால், திங்கட்கிழமையன்று ஒரு நடன வீடியோவை வெளியிட்ட Noyes, நான் உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன், என்னை நீங்கள் பார்ப்பது இதுதான் கடைசி முறை என்று அதில் கூறியிருந்தார்.
அதற்குப் பின் சமூக ஊடகத்தில் செய்தி ஒன்றை தெரிவித்திருந்த Noyesஇன் தந்தையான Raheem Alla, Noyes இப்போது நம்முடன் இல்லை, அவள் சிறப்பான ஒரு இடத்துக்கு போய்விட்டாள் என்று கூறியிருந்தார்.
ஆம், தனது கடைசி வீடியோவை வெளியிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் Noyes.
கடந்த ஆண்டில், இதே போல் உலகத்துக்கு இன்முகம் காட்டிவிட்டு, மறுபக்கம் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட பிரபலங்கள் பலர். இப்போது Noyesம் அதையே செய்திருக்கிறார்.
என் மகளுக்கு இப்படி மன உளைச்சல் இருந்தது எனக்குத் தெரியாது, அவள் என்னிடம் அதைக் குறித்து பகிர்ந்துகொண்டிருந்தால் என்னால் உதவியிருக்க முடியுமே என வருந்துகிறார் Noyesஇன் தந்தையான Raheem.


