பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட துயர முடிவு
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியப் பெண்ணொருவர், அசாதாரண விபத்தொன்றில் பலியானார்.
பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட அசாதாரண விபத்து
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற 62 வயது பிரித்தானியப் பெண்ணொருவர், பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.
மிக வேகமாக பனியில் சறுக்கிச் சென்ற அவர், எதிர்பாராதவிதமாக, நின்றுகொண்டிருந்த மற்றொரு பிரித்தானியர் மீது மோதியுள்ளார்.
இருவரும் பலமாக மோதிக்கொண்டதில், அந்த 62 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் வேகமாகச் சென்று மோதிய பிரித்தானியருக்கு வயது 35. மோதிய வேகத்தில் அவரது கால் உடைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சுற்றுலா சென்ற குழுவினரிடையே சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், எப்படி அந்த பெண் உயிரிழந்தார் என்பதை அறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |