இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணுக்கு கணவர் கண்முன்பே நடந்த கொடூரம்! வேதனையுடன் வெளியிட்ட வீடியோ
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் பெண்ணொருவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் influencer பெர்னாண்டா (Fernanda). இவரது கணவர் ஸ்பெயினைச் சேர்ந்த விசென்டே.
இவர்கள் இருவரும் ஜோடியாக ஆசிய நாடுகளைச் சுற்றிப் பார்க்க இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
a travelvlog couple trying to visit every country in the world decided to go to India as their latest destination.
— pagliacci the hated 🌝 (@Slatzism) March 2, 2024
11 hours ago they announced they were at the hospital because he had been beaten up and she had been gang raped by 7 men. pic.twitter.com/WNSd21TUi5
அங்குள்ள தும்கா மாவட்டத்தில் இரவுவேளையில் தற்காலிக கூடாரம் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், தம்பதி கடுமையாக தாக்கியுள்ளது.
அதன் பின்னர் பெர்னாண்டாவை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மூவரை கைது செய்துள்ளதுடன் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளிநாட்டு தம்பதியர் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளனர்.
அதில், 'யாரும் விரும்பாத ஒன்று எங்களுக்கு நடந்துள்ளது. 7 பேர் என்னை வன்புணர்வு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து கொள்ளையடித்துள்ளனர். பல விடயங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் விரும்பியது என்னை பலாத்காரம் செய்ய வேண்டும். நாங்கள் காவல்துறையுடன் மருத்துவமனையில் இருக்கிறோம். இது இந்தியாவில் இன்று இரவு நடந்தது' என பெர்னாண்டா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |