ஸ்பெயினில் அதிவேக ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 மில்லியன் யூரோ இழப்பீடு
கடந்த வாரம் நடந்த அதிவேக ரயில் விபத்தில் மரணமடைந்த 45 பேரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்த 150-க்கும் மேற்பட்டோருக்கும் இழப்பீடாக ஸ்பெயின் அரசாங்கம் 20 மில்லியன் யூரோ வழங்கவுள்ளது.
மூன்று மாதங்களுக்குள்
தெற்கே உள்ள கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடாமுஸ் நகரில் ஜனவரி 18 அன்று நடந்த பேரழிவிலிருந்து ஸ்பெயின் இன்னும் மீளவில்லை.

அந்த ரயில் விபத்து, சமீபத்திய ஐரோப்பிய வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்களில் ஒன்றாகவும், 2013-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினில் நடந்த விபத்துக்களிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.
மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தலா 216,000 யூரோக்கள் வழங்கப்படும். இது அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்ட 72,000 யூரோக்கள் உதவியும்,
72,000 யூரோக்கள் முன்கூட்டிய காப்பீட்டுத் தொகையாகவும், 72,000 யூரோக்கள் பயணிகளின் கட்டாயப் பயணக் காப்பீட்டிலிருந்தும் வழங்கப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 2,400 யூரோ முதல் 84,000 யூரோ வரை இருக்கும் என்றே அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர்
ஆடமுஸ் விபத்து மற்றும் அதே வாரத்தில் நடந்த பிற சம்பவங்களுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் பொதுமக்களின் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான மக்கள் கட்சி அவரது ராஜினாமாவைக் கோரியுள்ளது. இதனிடையே, பாதுகாப்புக் கவலைகள் காரணமாக பல சாரதிகள் வேலைக்கு வர மறுத்ததால், கடந்த வாரம் கேட்டலன் பயணிகள் ரயில் சேவையான ரோடாலிஸ் சேவையிலும் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |