அமெரிக்காவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து.. 157 பேரின் நிலைமை என்ன? வெளியான பரபரப்பு வீடியோ
அமெரிக்காவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Montana மாநிலத்தின் Joplin-ல் அருகே ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Amtrak Empire Builder பயணிகள் ரயில் சிகாகோவிலிருந்து சியாட்டிலுக்கு சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 குழுவின் பயணித்ததாக Amtrak தெரிவித்துள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் ரயிலுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Amtrak train derails in Montana, 3 dead and over 50 injured. ??
— ∼Marietta (@ThisIsMarietta) September 26, 2021
pic.twitter.com/CpiUBYI5mD
விபத்து தொடர்பில் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணை முன்னெடுத்துள்ளது.