Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்று உயிரிழந்த கல்லூரி மாணவர்
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்
விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், ராஜகோபால் கேட்டரிங் வேலைக்காக கோடம்பாக்கத்திற்கு ரயிலில் சென்றுள்ளார்.
தவறிய Bluetooth ஹெட்செட்
அப்போது அவர் காதில் மாட்டியிருந்த Bluetooth ஹெட்செட் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
அதனை எடுக்க கீழே இறங்கிய ராஜகோபால் தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக வந்த மற்றொரு ரயில் அவர் மீது மோதியதில் மாணவர் ராஜகோபால் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |