பிரான்சில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 44 பேர் காயம்
Train carrying 180 passengers derails in France: பிரான்சில் 180 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடக்கு பிரான்சில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 44 பயணிகள் வரை காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் தடம்புரண்ட ரயில்
வடக்கு பிரான்சிலுள்ள Rouen மற்றும் Caen நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணியளவில், Cleon நகருக்கு அருகே தடம்புரண்டுள்ளது.

ரயில் பாதையில் இருந்த ஏதோ ஒரு பொருள் மீது ரயில் மோதியதைத் தொடர்ந்து ரயிலின் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளதாகவும், மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் பிரான்ஸ் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில், 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகளில் 140 தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அந்த பகுதியைத் தவிர்க்குமாறு உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
