வருடத்திற்கு 2 முறை மட்டும் ரயில் வரும் நிலையம் - இந்தியாவில் எங்கே தெரியுமா?
இந்தியாவில் மொத்தமாக 7,349 ரயில் நிலையங்கள் உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 13,198 ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு சில ரயில் நிலையங்கள் 24மணி நேரமும் பரபரப்பாக இயங்கக்கூடியவை. ஆனால் ஒரு ரயில் நிலையத்தில் மட்டுமே வருடத்திற்கு 2 முறை மட்டுமே ரயில் வருகிறது.
ஹுசைனிவாலா ரயில் நிலையம்
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலா ரயில் நிலையத்தில் (Hussainiwala railway station) தான் ஆண்டுக்கு இருமுறை மட்டும் ரயில்கள் வந்து செல்கிறது.

இந்த ரயில் பாதையில் பெரோஸ்பூர் கண்டோன்மென்ட்டிலிருந்து ஹுசைனிவாலா வரை அமைந்துள்ளது.
ஹுசைனிவாலாவே இந்த வழித்தடத்தில் கடைசி எல்லை என்பதால் ரயில் பாதை இத்துடன் முடிவடைகிறது. இதில், ரயில்கள் வந்த வழியாகவே திரும்பி செல்லும்.
சமீபத்தில் _northern_vlogger என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இந்த ரயில் நிலையத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ரயில் நிலையம் விவாதமாகியுள்ளது. இதில், அவர் கடந்த மார்ச் 23 ஆம் திகதி தான் வந்த ரயிலையும் வீடியோவில் காட்டியுள்ளார்.
மார்ச் 23 ஆம் திகதி இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நினைவு நாள் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் ஹுசைனிவாலாவிற்கு வருகின்றனர். இதனால் அன்று ஒருமுறை இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது.
ஏப்ரல் 13 ஆம் திகதி வைசாகி பண்டிகையின் கடைசி தினம், என்பதால் அன்றும் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |