நாட்டை விட்டு வெளியேற தடை... உக்ரேனிய எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருநங்கைகள்! ஏன்?
திருநங்ககைளை உக்ரைனை விட்டு வெளியேற அனுமதிக்காமல், எல்லைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீதான படையெடுப்பால் அந்நாட்டை விட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
சுமார் 10 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற முயன்ற நூற்றுக்கணக்கான திருநங்கைகள், உக்ரேனிய எல்லைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களது பாஸ்போர்ட்டில் இன்னும் பிறந்த பெயர் மற்றும் பாலினம் இருப்பதால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
பாஸ்போர்ட்டில் உள்ள பாலினம் மற்றும் பெயரை மாற்றுவதற்கு பல உளவியல் மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட செயல்முறை தேவைப்படுகிறது.
அதன் காரணமாக, உக்ரைனில் பல திருநங்கைகள், பெயர் மற்றும் பாலினத்தை மாற்றாமல் இருந்துள்ளனர்.
ஆனால், தற்போது உக்ரைனில் அமுலில் இருக்கும் விதிகளின் படி, 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால், பாஸ்போர்ட்டில் ஆண் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநங்கைகள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டை விட்டு தப்பியோட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் முயன்றதாகவும், ஆனால், 90% பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக உக்ரைனின் முக்கிய திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் மதிப்பீட்டுள்ளது.