திருநங்கையாக மாறிய ஜி.பி முத்து... வைரலாகும் புகைப்படம்!
பிக் பாஸ் மூலம் பிரபலமாகிய ஜி பி முத்து சமீபத்தில் திருநங்கையாக மாறி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜி பி முத்து
Tik Tok மூலம் பிரபலமடைந்த ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பிறந்தார். இவர் பல வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகவே இருந்தார்.
இதன்பின் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இதனாலேயே இவருக்கு பல திரைப்படங்களில் வாய்ப்பும் வந்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இவர் திருநங்கையாக மாறி இருக்கும் ஒரு போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருநங்கையாக மாறிய ஜி பி முத்து
இப்போது அவர் 'ஆர்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ஜி.பி.முத்து திருநங்கையாக நடிக்கின்றார். இது தொடர்பான புகைப்படமானது படக்குழுவினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து போஸ்டரை ஜி.பி.முத்தும் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |