திருநங்கையை திருமணம் செய்து கொண்ட ஆண்! பின் குழந்தையை தத்தெடுத்த தம்பதி... சில மாதங்களில் மனைவிக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி
இந்தியாவில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த நபர் கோபத்தில் அவரை சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஜோதி கின்னர். திருநங்கையான இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சதாப் என்ற நபரை காதலித்து திருமணம் செய்தார். இதையடுடுத்து தம்பதிகள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் சதாப் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடன் வேறு வீட்டில் வாழ தொடங்கினார். இது முதலில் ஜோதிக்கு தெரியாத நிலையில் பின்னர் கணவரின் சுயரூபத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில் தன்னை உண்மையாக நேசிப்பதாக கூறிய சதாப் இப்படி செய்துவிட்டாரே என நொந்து போனார். இதற்கு பின்னர் ஜோதி - சதாப் இடையே இடைவெளி அதிகரித்து அடிக்கடி சண்டை வந்தது.
இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சில காலமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. இது தொடர்பாக ஜோதி தனது கணவர் சதாப் மீது பொலிசில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று காலையில் ஜோதி வீட்டுக்கு சதாப் வந்தார். அப்போது வீட்டில் வேலையாட்கள் இருந்த நிலையில் இருவரும் தனியறைக்கு சென்றனர்.
அங்கு பத்து நிமிடம் கழித்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பின்னர் அறையில் இருந்து வெளியில் வந்த சதாப் கையில் துப்பாக்கியுடன் கிளம்பி சென்றார். உள்ளே சென்று வேலையாட்கள் பார்த்த போது இரத்த வெள்ளத்தில் ஜோதி இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் வந்து ஜோதியின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
மேலும், சதாப் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.