ஓய்ந்தது மழை; சென்னையில் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவை
சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்
இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக விடாமல் மழை பெய்து கொண்டு இருகின்றது.
இதன் காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல இடங்கள் வெள்ளத்தினால் மூடப்பட்டு அனைத்து போக்குவரத்து சேவைகள் மற்றும் மின்சார தடைகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் குறிப்பிட்ட தொடருந்து சேவைகளும் விமான சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Hindu Tamil
போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்
மழையினால் ஏற்பட்ட வெள்ளம் குறைந்துள்ளதால் விமான நிலையம் காலை 9 மணியில் இருந்து வழமைப்போல் இயங்கும். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டாலும் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயங்கும் எனவும் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
Hindu Tamil
மேலும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும். நேரம் செல்லசெல்ல வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |