கழிவறைக்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் ஒன்றின் கழிவறைக் கோப்பையிலிருந்து விஷமுள்ள உடும்பு ஒன்று எட்டிப்பார்த்துள்ள சம்பவம் சுற்றுலாப்பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் பத்தும் தானி என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.
அப்போது அவர் அங்கு புதிதாகக் கட்டப்பட்ட ஹோட்டலில் தங்கிய அவர்கள் கழிவறைக்குச் சென்ற போது அதன் கோப்பையில் உடும்பு ஒன்று எட்டிப் பார்ப்பதைக் கண்டனர்.
இதனை பார்த்து இவர் அதிர்ச்சியடைந்துள்ளார். உடும்புகள் லேசான நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பின்பு உடும்பும் மீண்டும் கோப்பைக்குள் பயணித்து கழிவுநீர் குழாய் வழியாக வெளியேறியது.