விமானத்திற்குள் பயங்கரமாக மோதிக் கொண்ட பயணிகள்.. கூச்சலிட்ட பெண்கள்! வெளியான வீடியோ
அமெரிக்காவில் விமானத்திற்குள் இரண்டு பயணிகள் சரமாரியாக மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவிலிருந்து டென்னசி, மெம்பிஸ் நகருக்கு வந்த டெல்டா பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
டெல்டா பயணிகள் விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மெம்பிஸ் நகரில் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து, பயணிகள் விமானத்தை விட்டு இறங்க தயாராகும் போது இரண்டு பயணிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
குறித்த வீடியோவில், பழுப்பு நிற ஆடை அணிந்திருக்கும் நபரும், நீலம் நிற ஆடை அணிந்திருக்கும் நபரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கின்றனர்.
இதைக்கண்டு, விமானத்திற்கு இருந்த பெண்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். எனினும், அங்கிருந்த பயணிகள் இருவரையும் தடுத்து சண்டையை நிறுத்தியுள்ளனர்.
பழுப்பு நிற ஆடை அணிந்திருந்த நபர், நீல நிற ஆடை அணிந்திருந்த நபரை பார்த்து மிகவும் மோசமான நபர் என கூறயதை தொடர்ந்து பிரச்சனை தொடங்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பயங்கர வார்த்தை மோதல் இறுதியில் கைகலப்பில் முடிந்தது என பயணி தெரிவித்துள்ளார்.