இலங்கையில் பொலிஸ் அதிகாரியின் மனைவி கைது! புதையல் வேட்டை தொடர்பான சர்ச்சை
இலங்கையில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதையல் வேட்டை
புதையல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி இலங்கையில் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கணவரான பொலிஸ் அதிகாரி வடமத்திய மாகாணத்தில் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு அவரது மனைவியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதில், தனது மனைவி புதையல் வேட்டைக்கு செல்லவில்லை என்றும், அவர் பூஜைக்காக வந்திருந்தார் என்றும் முறையீட்டதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிகாரியின் தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர்.
மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் இருந்து முழு அறிக்கை பெற்ற சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |