90 நிமிடங்கள் தாண்டி செல்லும் பேச்சுவார்த்தை: வெற்றி பெறுமா டிரம்ப்-புடின் சந்திப்பு?
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த டிரம்ப்-புடின் சந்திப்பு கிட்டத்தட்ட 90 நிமிடங்களை கடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
வெற்றி பெறுமா டிரம்ப்-புடின் சந்திப்பு?
உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அலஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடந்து நடைபெற்று வருகிறது, எனவே இது குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Pursuing Peace. 🇺🇸🇷🇺 pic.twitter.com/d9VqKzpF6g
— The White House (@WhiteHouse) August 15, 2025
எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், இந்த வாரத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், சந்திப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே புடின் போர் நிறுத்தம் மீது ஆர்வமாக உள்ளார் என்பதை தன்னால் அறிந்து கொள்ள முடியும்.
ஒருவேளை சந்திப்பின் போக்கு மோசமாக சென்றால், நான் உடனடியாக பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி விடுவேன் என டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.
புடினுடனான சந்திப்பு நன்றாக சென்றால், விரைவில் நாம் அமைதியை பெறுவோம் எனவும் தெரிவித்து இருந்தார்.
7 மணி நேர சந்திப்பு
இரு தரப்பு பிரதிநிதிகளுக்கான மதிய உணவு இன்னும் தொடங்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக இரு தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை 7 மணி நேரம் வரை நீடிக்கலாம் என ரஷ்யா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |