ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன?
அலாஸ்கா மாகாணத்தில் ட்ரம்பும் புடினும் முன்னெடுத்த உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், இனி உக்ரைன் முடிவு செய்யட்டும் என்றே ட்ரம்ப் கைவிரித்துள்ளார்.
உக்ரைனின் Donetsk
அலாஸ்கா பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முழுமையான தகவல் ஏதும் இதுவரை வெளிவராத நிலையில், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் ட்ரம்பை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்திக்க இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஓவல் அலுவகத்தில் வைத்து ஏற்பட்ட அவமானத்தை மறக்காத ஜெலென்ஸ்கி, தற்போது பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் என தமக்காக பரிந்துபேச ஒரு சிறப்பு குழுவினருடன் ட்ரம்பை சந்திக்க சென்றுள்ளார்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், போர் நிறுத்தம் கோரிய ஜனாதிபதி ட்ரம்பிடம் அதற்கு ஈடாக உக்ரைனின் Donetsk பகுதியின் முழு கட்டுப்பாட்டையும் விளாடிமிர் புடின் கோரியுள்ளார். அத்துடன், ரஷ்யா வல்லரசு நாடு என்றும் உக்ரைன் அப்படி அல்ல என்றும் ட்ரம்பிடம் புடின் வாதிட்டுள்ளார்.
கனிம வளங்கள்
உக்ரைனின் Donetsk பகுதியானது நிலக்கரி, எஃகு மற்றும் எரிசக்தி வளங்களைக் கொண்ட அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை மையமாகும்.
தற்போதைய உக்ரைன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் அறியப்படும் இந்தப் பகுதி, ரஷ்யா-உக்ரைன் போரின் மையப் போர்க்களமாக உள்ளது. அங்குள்ள கனிம வளங்களே விளாடிமிர் புடினின் இலக்காக உள்ளது.
ஆனால் உக்ரைன் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உக்ரைனின் துறைமுக நகரமான கிரிமியாவை 2014ல் இதுபோன்றதொரு இராணுவ நடவடிக்கையால் புடின் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |