இந்தியா வந்த சுவிஸ் இளம்பெண்ணை ஏமாற்றிய மூன்று ஆண்கள்...
இந்தியாவுக்கு வந்த சுவிஸ் நாட்டு இளம்பெண்ணிடம் மோசடி செய்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தாஜ்மகாலுக்கு வந்த சுவிஸ் இளம்பெண்
இந்தியா வந்துள்ள சுவிஸ் நாட்டவரான இசபெல் என்னும் பெண், நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, பிரபல சுற்றுலாத்தலமான தாஜ்மகாலைக் காணச் சென்றுள்ளார்.
அவருக்கு கைடாக செயல்பட்ட ஃபர்கான் அலி என்பவர், ஹைதர் அலி என்பவருடைய கடையில் ஷாப்பிங் செய்ய ஆலோசனை கூறியுள்ளார்.
அங்கு மார்பிளால் செய்யப்பட்ட செஸ் போர்டு ஒன்றை வாங்கியுள்ளார் இசபெல். கடையில் வேலை செய்யும் ஆமிர் என்பவர் இசபெல் வாங்கிய பொருட்களின் விலை 80,000 ரூபாய் என்று கூற, ஃபர்கான் அவரிடம் போலியாக பேரம் பேச, கடைசியில் 37,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார் இசபெல்.
சரி, நல்ல இலாபத்துக்கு பொருட்கள் கிடைத்தன என சந்தோஷப்பட்டுக்கொண்டே சுற்றி வந்த இசபெல், மற்றொரு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வாங்கிய அதே பொருட்கள் வெறும் 4,900 ரூபாய்க்குக் கிடைப்பதை அறிந்த இசபெல், தான் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டுள்ளார்.
Image used for representative purpose only
பொலிசில் புகார்
தன்னை ஏமாற்றிவிட்டதாக இசபெல் அளித்த புகாரின்பேரில், அவருக்கு கைடாக செயல்பட்ட ஃபர்கான் அலி, கடைக்காரர் ஹைதர் அலி மற்றும் கடையில் வேலை செய்யும் ஆமீர் ஆகிய மூவரையும் கைது செய்த பொலிசார், அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.