ஒலிம்பிக்கில் கேலி கிண்டலுக்கு ஆளான அமெரிக்க வீரர்களின் முகக்கவசம்!
ஒலிம்பிக்கில் அமேரிக்க வீரர்கள் பயன்படுத்தும் வித்தியாசமான முகக்கவசம் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக வைரலாகிவருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு 12 மாத தாமதத்திற்குப் பிறகு இறுதியாக நடைபெற் வருகிறது. மேலும் இந்த மெகா விளையாட்டு நிகழ்வு உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமண ப்ரொப்போசல் முதல் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பெருங்களிப்புடையை எதிர்வினைகள் வரை, இந்த 32-வது ஒலிம்பிக் நிகழ்வு உற்சாகத்தில் எந்த குறையும் இல்லாமல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், Team USA வீரர்கள் அணிந்துள்ள புது விதமாக முகக்கவசம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த முகக்கவசம் வடிவமைப்பு பாரம்பரிய KN95 போன்று இருந்தாலும், ஓவல் வடிவத்தில் வைரம் போன்ற அச்சுகளுடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
இந்த முகக்கவசத்தின் வடிவமைப்பு பலரைக் கவர்ந்தாலும், அதை அணிந்திருக்கும் பல வீரர்களுக்கு மூக்கு மற்றும் வாயைச் சுற்றி சரியாக பொருந்தவில்லை. அதை பயன்படுத்துவதால் எந்த நம்மையும் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
இந்நிலையில், அந்த முகக்கவசம் - கற்பனைக் கதாப்பாத்திரமான சீரியல் கில்லர் ஹன்னிபால் லெக்டர் அணிந்திருந்த முகமூடி, மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன்கள் பயன்படுத்திய முகமூடிகளைப் போல் இருப்பதாக மீம்ஸ்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.
My impression on team USA face masks in #Olympics pic.twitter.com/LzcIb9fRym
— adultman (@adultman91) July 27, 2021
That Team USA face mask though ? pic.twitter.com/avSoOAPlmA
— _toinfinityandbeyond (@SHeart1207) July 25, 2021