உக்ரைனில் போரில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சகம்
உக்ரைன் போர் நடவடிக்கையில் பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
பிரித்தானிய வீரர் உயிரிழப்பு
உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் - ரஷ்யா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகள் தயாராகி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் போர் நடவடிக்கையில் பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய வீரர் லான்ஸ் கார்ப்பரஸ் ஜார்ஜ் ஹூலி(lane corporal george hoolet) என்ற 28 வயதுடைய பாராட்ரூப்பர்(paratrooper) ஆவார்.
முன்கள போர் வரிசையில் இருந்து விலகி புதிதாக உருவாக்கப்பட்ட தற்காப்பு அமைப்புகளை சோதிக்கும் குழுவில் செயல்பட்டு வந்த லான்ஸ் கார்ப்பரஸ் எதிர்பாராத துயரமான விபத்தில் உயிரிழந்தார்.

லான்ஸ் கார்ப்பரஸ் நவம்பர் 2015ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்ததாகவும், அவர் தனது தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த வீரராக பணியாற்றியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |