திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கும், மதிமுகவுக்கும் கடும் போட்டி
இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதியின் நிலவரத்தை பார்க்கலாம்.
திருச்சி தொகுதி நிலவரம்
திருச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் நடக்கிறது. தபால் வாக்குப்பதிவு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை பிரிக்கப்பட்ட தபால் வாக்குகளின் அடிப்படையில் மதிமுக கட்சி தீப்பெட்டிக்கும் , நாம் தமிழர் கட்சி மைக்குக்கும் தான் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது.
அடுத்ததாக, அமமுக கட்சி குக்கர் சின்னத்திற்கு ஓரளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல் சுற்று முடிவுக்கு பிறகு தான் யாருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது தெரியவரும்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்பட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |