தாயகம் திரும்புகிறோம்! 6 இலங்கை தமிழர்கள் விருப்பம்... செல்ல விருப்பமில்லை என்ற ஒருவர்
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 6 இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
தாயகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம்
தாயகம் செல்லும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை அனுப்பப்பட்டனா். திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் விசாரணை மற்றும் தண்டனை காலத்துக்குப் பின்னா் அவரவா் தாயகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் இலங்கையைச் சோ்ந்த வா்ஷானன், பாய்வா ரீகன், ராஜெம்ட்ராம், உதயகுமாா், அருள் வசந்தன், அருண் குரூஸ் உள்ளிட்ட 7 பேரும் தாயகம் செய்ய விரும்பிய நிலையில் அவர்களை அனுப்ப மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை தூதரகத்துக்கு
இதில் ஒருவா் மட்டும் தற்போது தாயகம் செல்ல விருப்பமில்லை எனத் தெரிவித்ததையடுத்து மற்ற 6 பேரும் இலங்கை செல்லும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பப்பட்டனா்.
அங்கிருந்து அவா்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படுவா் என தெரியவந்துள்ளது.