உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: சவுதி அரேபியாவில் சந்திப்பு
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |