பிரித்தானிய சாலையில் மூவருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: கத்திக்குத்தில் பறிபோன பெண்ணின் உயிர்!
பிரித்தானியாவில் நடந்துள்ள கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 43 வயதுடைய பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 17 வயதுடைய பதின்பருவ சிறுமி மற்றும் 64 வயது முதியவர் என இரண்டு பேர் தீவிரமான கத்திக்கு பிறகு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றவாளியும், பாதிக்கபட்டவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருக்கலாம் என்றும், இது தனிப்பட்ட சம்பவம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Gorton பகுதியில் உள்ள Barnard சாலையில் இந்த குற்றச் சம்பவம் அரங்கேறிய நிலையில், அப்பகுதியில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி கைது
இந்த கத்திக்குத்து சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 மணி அளவில் நடைபெற்று இருப்பதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் பரிதவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |