பள்ளியில் த்ரிஷா எப்படிப்பட்ட பெண் தெரியுமா? மேடையில் புட்டுபுட்டு வைத்த ஆசிரியர்
நடிகை த்ரிஷாவைப் பற்றி மேடையில் பள்ளி ஆசிரியர் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமா துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா.
பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா.
ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது. முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
ஆசிரியர் ஓபன் டாக்
சமீபத்தில் ஒரு பிரபல சேனல் விருது நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்த விருது நிகழ்ச்சியில் பிரபல நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். அவர் மேடைக்கு வந்ததும், த்ரிஷாவை கண்களை மூடச் சொல்லி தொகுப்பாளர்கள் சொன்னதும், த்ரிஷா கண்களை மூடினார்.
அப்போது பின் புறத்திலிருந்து த்ரிஷா படித்த பள்ளியின் ஆசிரியர் நின்றார். ஆசிரியரைப் பார்த்ததும் த்ரிஷா அப்படியே ஷாக்காகி அவரை கட்டியணைத்தார்.
அப்போது, மேடையில் ஆசிரியர் கலா கிருஷ்ணசுவாமி பேசுகையில்,
த்ரிஷா எல்கேஜி படிக்கும்போது, த்ரிஷா வகுப்பறைக்கு வராங்களோ இல்லையோ த்ரிஷா அம்மா கேட் கிட்ட நிற்பாங்க. அம்மா ரொம்ப நேரம் வெயிட் பண்ணி, த்ரிஷா அழுகிறாளா இல்லையா பார்த்துவிட்டுதான் செல்வார்கள்.
த்ரிஷா ரொம்ப புத்திசாலியான பெண். உயரம் தாண்டுதல் போட்டியில் த்ரிஷா நன்றாக விளையாடுவாள். 7ம் வகுப்பு வந்ததும் எல்லாரும் பிரெஞ்ச் மொழியில் சேர்ந்து விட்டார்கள். என் மகள் என்னிடம் சொன்னாள்.
அம்மா... பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கப்போறாள் என்று. ஆனால், இவ்வளவு அழகாக நடித்து பேசி அசத்தியிருக்கிறாள். இவளுடைய சாதனைக்கெல்லாம் த்ரிஷாவின் தாய் தான் காரணம். இவளின் தாய் தான் த்ரிஷாவின் இந்த அளவு முன்னேற்றத்திற்கு காரணம்.