விஜய் உடன் திருமணமா? திரிஷாவின் அம்மா கொடுத்த ரியாக்சன்
இன்ஸ்டாகிராமில் விஜய் திரிஷா திருமணத்திற்கு வந்த வீடியோவிற்கு திரிஷாவின் தாய் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு 3 நாட்கள் முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இதனையடுத்து, திருமண நிகழ்வு ஒன்றுக்கு விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே நிற உடை அணிந்து ஒன்றாக கலந்து கொண்டனர்.

இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் திரிஷா ஒன்றாக வந்தது குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த நடிகை சனம் ஷெட்டி கூட ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒரு சிலர் கடந்து சென்றாலும், இது அவரது அரசியலை பாதிக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சில ரசிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
த்ரிஷாவின் தாய் கொடுத்த ரியாக்சன்
இந்த நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா திருமணத்திற்கு ஒன்றாக வரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றில், தாலி கட்டுவது உறுதி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது.
Trisha mother liked this real... "Thali kattuvadhu urudhi date arivikkapadum "" What it refers tooo 😭😭😭😭😭 ivlo open ah like pandrangaa pic.twitter.com/EKqyXdGHyo
— Thalapathy sanjay (@Prabhu15708) March 14, 2026
இந்த ரீல்ஸுக்கு த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக்ஸ் செய்துள்ளதாக புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதனால், உண்மையாகவே விஜய்க்கு த்ரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், அது தவறுதலாக கை பட்டு லைக் ஆகி இருக்கலாம், தற்போது லைக்ஸ் பட்டியலில் அவரது பெயர் இல்லை என ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |