இனி அது நடக்கும்... காஸா தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படை
காஸா பகுதிக்குள் என்ன நடக்கிறது என்பதை மிக விரைவில் நீங்கள் உள்ளே சென்று காணப்போகிறீர்கள் என வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரைவழிப் படையெடுப்பு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant வியாழக்கிழமை காஸா எல்லையில் கூடியிருந்த துருப்புக்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். ஹமாஸ் படைகளை நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் எதிர்பார்க்கப்படும் தரைவழிப் படையெடுப்பு நெருங்கி வருவதை அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
@reuters
அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் வியாழக்கிழமையும் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் சென்றுள்ளதுடன் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
காஸா பகுதி பொதுமக்கள் மீதான தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என கண்டனம் தெரிவித்திருந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துள்ளார்.
காஸா பகுதியில் வாழும் 2.3 மில்லியன் மக்களை இஸ்ரேல் தற்போது முற்றுகையிட்ட நிலையில் உள்ளது. தொடர் தாக்குதலை முன்னெடுப்பதால் வீடற்றவர்கள் எண்ணிகை மில்லியன் கடந்துள்ளது.
@reuters
கிறிஸ்தவர்கள் பலர்
இந்த நிலையிலேயே காஸா மீது தரைவழிப் படையெடுப்பை முன்னெடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு தலைவர்கள் தொடர்ந்து வருகை தருவதால் காஸா மீதான தரைவழிப் படையெடுப்பு தாமதமாவதாக கூறுகின்றனர்.
இதனிடையே, காஸா மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்தில், இறப்பு எண்ணிக்கை 100 முதல் 300 வரை இருக்கலாம் என்றே புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில் 471 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
இஸ்ரேல் தரப்பு தெரிவிக்கையில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் 12ம் நூற்றாண்டு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் கிறிஸ்தவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |